Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காற்றாலை மின் உற்பத்தி குறைவு:மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி குறைவு:மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி குறைவு:மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி குறைவு:மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

ADDED : ஜூன் 04, 2010 01:27 AM


Google News

கோவை : காற்றாலையிலிருந்து கிடைக்கும் 2000 மெகாவாட் மின்சாரம், 28 மெகாவாட் மின்சாரமாக குறைந்ததால் கோவையில் நேற்று முன் தினம் முதல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது; தற்போதும் தொடர்கிறது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சேர்த்து ஒரு நாளைக்கு 2000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கடந்த வாரத்தில் காற்றாலை மின் உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக இருந்ததால், கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் மின்வாரியம் அறிவித்த அளவுக்கு மின்வெட்டு இல்லை.



நேற்று முன் தினம் காலை முதல் கோவை நகரில் தொடர்ச்சியாக நான்கு மணி நேர மின்வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து 10 நிமிட நேர இடைவெளியில் தொடர்ச்சியாக மின்வெட்டு நீடித்தது. அலுவலகப்பணி மேற்கொள்வோர், சிறுதொழில் செய்வோர், அலுவலகம் வைத்திருப்போர், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாயினர்.



கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு கூறியதாவது: தமிழகத்தில் அனல் மின், நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளது. காற்று வீசும்போது காற்றாலைகள் மின் உற்பத்தி செய்கின்றன. கோவை நகர் மற்றும் புற நகர் பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 2000ம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. வீசும் காற்றை பொறுத்தே காற்றாலை மின்சாரம் கிடைத்து வருகிறது. நேற்று முன் தினம் காலை காற்றின் வேகம் சீராக இல்லாததால் வழக்கமாக உற்பத்தியாகும் 2000ம் மெகாவாட் மின் உற்பத்தி 28 மெகாவாட்டாக குறைந்தது.



கோவை நகருக்கு வரும் மின்சாரத்தின் அளவு குறைந்தது. மாற்று ஏற்பாடுகள் இல்லாத நிலையில், மின்வெட்டு அதிகரித்தது. மீண்டும் நேற்று காற்று வீசத்துவங்கியுள்ளது. 1100 மெகா வாட் மின்சாரம் நேற்று உற்பத்தியாகியுள்ளது. மின்வினியோகம் நேற்று சீரடைந்துள்ளது. இவ்வாறு, கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us